இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தருகிறது: ராஜ்நாத் சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சரிசெய்வது தொடர்பாக ராஜ்நாத் சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவருடன் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது காஷ்மீரில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள், பாகிஸ்தான் உடனான பிரச்னைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லாவுடன் ஏற்கனவே ராஜ்நாத் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் அக்கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளுடன் இன்று ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்வதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதாகவும் கூறினார். மேலும் காஷ்மீர் எல்லையில் வசிக்கும் மக்களின் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement