குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய விழா: ஊடகங்களுக்கு அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையம் தொடங்கப்பட்டு 259 ஆண்டுகள் நிறைவடைவதன் விழா வரும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.


Advertisement

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையம் துவங்கப்பட்டு 259 ஆண்டுகளாகிறது. இதன் துவக்க விழா வரும் டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் போர் பயிற்சி எடுப்பது குறித்து படக்காட்சி எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்து போர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு நடைபெறும் போர் பயிற்சியின் போது சிறந்து பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள், வழங்கப்படுவது வழக்கம். பொதுவாக இந்த போர் பயிற்சி செய்வதை பார்வையிட ராணுவ தரப்பு அனுமதி வழங்குவதில்லை. 259 ஆண்டு துவக்கவிழா வருவதையொட்டி ஊடகத்துறையினர் அனுமதிக்கப்படுவதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement