‘இது என் இந்தியா அல்ல’ இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘ஒன்ஹார்ட்’ வெளியிட்டு நிகழ்ச்சிக்காக மும்பையில் பேசிய இசைப்புயல் ‘இது என் இந்தியா அல்ல’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.


Advertisement

பொதுவாக அரசியல் விஷயங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிகம் பேசுவபவர் இல்லை ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் சமீபகாலமாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது அரசியல் விவகாரங்கள் பற்றிய தனது கருத்துக்களை தயக்கமில்லாமல் தெரிவித்து வருகிறார் ஆஸ்கர் நாயன் ரஹ்மான்.

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியவர் “இதற்காக நான் மிக மிக வருந்துகிறேன். இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கக்கூடாது. இருந்தும் நடந்து வருகிறது. இது என்னுடைய இந்தியா இல்லை. எனக்கு வேண்டியது பாசிடிவ்வான பொறுப்பான இந்தியாதான்” எனப் பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கொலையாளிகள் குறித்த துப்புக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அறிவித்திருப்பது கவனத்திற்கு உரியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement