வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கோப்பையை வென்றது இங்கிலாந்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற வெற்றி விகிதத்தில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.


Advertisement

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களும், இங்கிலாந்து 194 ரன்களும் எடுத்தன. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 62 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 107 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

loading...

Advertisement

Advertisement

Advertisement