[X] Close >

திருச்சி பாஜக கூட்டத்தில் ‘நீட்’டாக இருந்த நாற்காலிகள்

The-chairs-in-the-Trichy-BJP-meeting-were--NEET-

திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஆட்கள் யாருமே இல்லாமல் நாற்காலிகள் காலியாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறன்றன.


Advertisement

‘நீட்’டுக்கு எதிராக திருச்சியில் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. நீதிமன்ற தீர்ப்பால் கடைசி கட்டம் வரை கூட்டம் நடக்குமா? நடக்காதா என சந்தோகம் நீடித்தது. இறுதியாக திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் “நாளை இதே இடத்தில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறது. நான் இன்று முன் வைக்கும் கேள்விகளுக்கு நாளை பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் சொல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்கு மக்கள் யாருமே வரவில்லை. போடப்பட்ட நாற்காலிகள் முக்கால்வாசி காலியாக கிடந்தன. அக்காட்சிகளை வீடியோ எடுத்து பலர் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மீம்ஸ்கள் மூலம் கேலி செய்தும் வருகின்றனர்.


Advertisement

இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “அந்தப் படங்கள் எல்லாம் போலியானவை. திட்டவிட்டு பரப்பப்படும் விஷம பிரச்சாரம். விரைவில் பள்ளிகள் தோறும் ‘நீட்’க்கு ஆதரவான கருத்தைப் பேசி பிள்ளைகளுக்கு புரிய வைக்கப் போகிறோம்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close