மாணவர்கள் போராட்டத்தை கைவிட தம்பிதுரை வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக தெரிவித்தார். நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். எனினும் தற்போது நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுவதால், அதற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான பணிகளை அரசு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று 5-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement