அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சைதை துரைசாமி ஆகியோருக்கு கட்சியில் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ளார். இதன்படி, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஆக உள்ள செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேயராக பதவி வகித்த சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இலக்கிய இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற பின் அதிமுகவில் நடைபெறும் மிகப்பெரிய நிர்வாகிகள் நியமனம் இதுவாகும்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி