கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஏன் விளையாட வில்லை என்று கிரிக்கெட் வீரர், ராபின் உத்தப்பா விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியை தொடர்ந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக், கர்நாடக பிரிமீயர் லீக் (கேபிஎல்) என மாநில அளவில் பீரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதில் கேபிஎல் போட்டியில் கர்நாடக வீரரான ராபின் உத்தப்பா விளையாடவில்லை. ஏன் விளையாட வில்லை என அவரிடம் பலர் கேட்டுவந்தனர். இந்நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ‘என் மனைவி சீத்தலுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. எங்களின் முதல் குழந்தை என்பதால் அந்த குழந்தையை வரவேற்க தயாராக இருக்கிறோம். குழந்தை பிறக்கும் வரை மனைவியுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதன் காரணமாக கேபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?