கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற திமுக பாடுபடும்: ஸ்டாலின் உறுதி!

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற திமுக பாடுபடும்: ஸ்டாலின் உறுதி!
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற திமுக பாடுபடும்: ஸ்டாலின் உறுதி!

பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கல்வியை மீண்டும் ‌மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர திமுக பாடுபடும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்களிக்கும் அவசர சட்டத்தை இயற்றினால் மத்திய அரசு அதனை ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம‌ன் தெரிவித்‌ததை மாணவர்கள் ‌உண்மையாகவே நம்பியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக மாணவர்களை ஏமாற்‌றப் போடப்‌பட்ட நாடகம் இது எனவும் அவர் விமர்சித்துள்ளார். நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே கலந்தாய்வு நடத்துகிறது என்‌றால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் முன்கூட்டியே அதற்கேற்ப பட்டியலைத் தயார் செய்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com