[X] Close >

தமிழுக்கு திரும்பும் துல்கர் சல்மான்

dulqur-salmaana-back-into-tamil-cinema

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தின் வெற்றியை தொடர்ந்து புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் உடன் கைகோர்க்க உள்ளார் துல்கர் சல்மான்.


Advertisement

மலையாள திரைப்பட உலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான துல்கர் சல்மான் ஓகே கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த துல்கர் சல்மான் அதற்கான கதை தேடலில்
ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக் உடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல், காமெடி கலந்த கமர்ஷியல் பட பாணியில் படம் தயாராகவுள்ளதாகவும் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் மற்றும் நிவேதா பேதுராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான தலைப்பு இன்னும் உறுதி
செய்யப்படவில்லை என்றும் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close