ஜி.எஸ்.டி உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜி.எஸ்.டி வணிக‌ உச்சவரம்பை 50 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.  


Advertisement

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாகவும், இது குறித்து 8 மாநிலங்களை சேர்ந்த வணிகர்களின் பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கேரளாவில் வரும் 20 ஆம் தேதிக்கு மேல் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தாமத கட்டணத்திற்கு கந்துவட்டி வசூல் போல் தினமும் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் ரூபாய் 20 லட்சம் வணிகம் நடைபெற்றால் வரிவிதிக்கப்படும் என்பதை மாற்றி ரூபாய் 50 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி எண் இல்லாத சிறுவியாபாரிகளுக்கு சரக்கு முகவர்கள் வியாபாரிகளின் முகவரி கொண்டு சரக்குகளை விநியோகம் செய்யவேண்டும் என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement