ஊர் வாயை யாராலும் மூட முடியாது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் படம், கருப்பன்’. விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். ’ரேனிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்குகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
அப்போது விஜய் சேதுபதி பேசும்போது, ’ரேனிகுண்டா படத்தில் ஒரு விலைமாது கேரக்டரை கூட கண்ணியமாக காட்டியிருப்பார் பன்னீர்செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இந்த படத்தில் கூட ஒரு முதலிரவு பாடலை சிறப்பாகப் படம் பிடித்துள்ளார். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான். ஜல்லிக்கட்டை பற்றிய கதை இது. இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ஸ்டன்ட் இயக்குனர் ராஜசேகர் மாஸ்டர்.
என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான் திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குனரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாகச் சொல்ல முடியாது. விமர்சனம் என்பது தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது’ என்றார்.
Loading More post
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுச்சேரி வருகை
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!