[X] Close >

சென்னையில் சாலை விபத்து மரணங்கள் குறைந்தது: புள்ளி விவரத்தில் தகவல்

Chennai-Road-accident--details

சென்னையில் சாலை விபத்து மரணங்கள் குறைந்து உள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, “போக்குவரத்து விதிகளை மீறியதாக இந்தாண்டு மட்டும் 12 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசியதாக 11,900 வழக்குகள் பதியப்பட்டுள்ள‌ன. கடந்த 2015 ஆகஸ்ட் தொடங்கி 2016 ஆகஸ்ட் வரை 5,010 சாலை விபத்துகள் நடந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறும் போக்குவரத்து காவல்துறையினர் 2016 செப்டம்பர் தொடங்கி இந்த ஆகஸ்ட் மாதம் வரை 4807 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இந்தாண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 2113 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இதுவரை ரூ.11 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர்.


Advertisement

இதனிடையே, கணக்கு காட்டுவதற்காகவே வழக்குகள் பதியப்படுவதாக போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் அது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளைப்படவில்லை என்ற விளக்கத்தை சென்னை போக்குவரத்து போலீசார் முன் வைக்கின்றனர். பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு அளித்தாலும் வாகன ஓட்டிகள் பொறுப்புணர்ந்து செயல்பட்டாலே விபத்து குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close