JUST IN

Advertisement

அமெரிக்க மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் 33 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

அமெரிக்காவில் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் பெண்‌களில் நான்கில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை ஆய்வாளர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் அம்பலமாகியு‌ள்ளது. 33 மாகாணங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், தவறுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் தலைமை ஆய்வா‌ளர் அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் 17 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள நர்சிங்ஹோம் எனப்படும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 14 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே அதுபோன்ற மருத்துவமனைகளின் தரம் கேள்விகுறியாகியுள்ள நிலையில்,‌ தற்போது பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement