மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிரிண்டட் சர்க்யூர்ட் போர்டுகளுக்கு (PCB) 2 சதவீத கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவில் இந்த போர்டுகளின் செலவு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆகும். உள்நாட்டு பிசிபி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். இன்றைய சூழலில் இந்திய சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பிசிபிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!