ரஜினியின் ’2.ஓ’ தெலுங்கு உரிமை ரூ.81 கோடி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்தின் ’2.ஓ’ பட தெலுங்கு உரிமை ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement

ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.ஓ’ . ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியது.

இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டரிக்கல் உரிமை ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குளோபல் சினிமா இந்த உரிமையை பெற்றுள்ளது. 
2010-ல் வெளியான ரஜினியின் ’எந்திரன்’ படத்தின் தெலுங்கு உரிமை ரூ. 27 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது. 


Advertisement

’2.ஓ’ வியாபார ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement