தினேஷ் கார்த்திக், லட்சுமணனுக்கு சிறந்த வீரர் விருது

Dinesh-karthik--Lakshmanan-got-award

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தடகள வீரர் லட்சுமணன் ஆகியோருக்கு, தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது.


Advertisement

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றதால், புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் , ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தேர்வானார். தினேஷ் கார்த்திக்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், விருது வழங்கி கவுரவித்தார். லட்சுமணனின் பயிற்சியாளர், லோகநாதனுக்கு சிறந்த பயிற்சியாளருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர் மேனுவல் ஆரோன், முன்னாள் ஹாக்கி வீரர் வி.ஜே. பிலிப்ஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.


 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement