ஐபிஎல் தொடரில் தோனியும், பிராவோவும் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளனர். ஐபிஎல் போட்டிகளின்போது இருவரும் நல்ல நண்பர்களாகி, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். நண்பர்களான பிறகு, ஒருவர் மனதில் நினைப்பதை அவரது நண்பர் புரிந்துகொள்வது என்பது நெருங்கிய நண்பர்களால் மட்டுமே முடியும். அதுபோல சம்பவம் ஒன்று தோனிக்கும், பிராவோவுக்கும் நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே நாளில், அதாவது 27 ஆகஸ்ட் 2016 அன்று, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒரு டி20 போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியில் இரு அணிகளும் பல்வேறு புதிய சாதனைக்களைப் படைத்தன. டி20 போட்டியில் இரு அணிகளின் மொத்த ரன்கள் 489. இந்த உலக சாதனையை இதுவரை எந்த டி20 போட்டியிலும், எந்த அணிகளும் எட்டியதில்லை. இரு அணி வீரர்களும் சேர்ந்து மொத்தம் 36 சிக்சர்களை விளாசினர். இதுவும் புதிய சாதனையே.
இந்திய அணி அமெரிக்க மண்ணில் விளையாடிய முதல் போட்டியும் இதுதான். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 245 எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்தியா வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தது. 244 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீதம் ஒரே ஒரு பந்துதான் இருந்தது. இந்தியா வெற்றிபெற 2 ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது தோனி கடைசி பந்தை எதிர்கொண்டார். பந்து வீசியவர் தோனியின் நண்பரான பிராவோ. பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தோனி என்ன செய்ய உள்ளார் என்பதை கணித்தார். நான்கு ரன்களோ அல்லது சிக்ஸரோ அடிக்காமல், 2 ரன்கள் எடுக்க தோனி முடிவு செய்திருப்பதை மிகச்சரியாக கணித்தார் பிராவோ. அதை முறியடிக்கும் விதமாக வேகம் குறைந்த பந்து வீசி அவரது எண்ணத்தை முறியடித்தார் பிராவோ.
கடைசி பந்தை எதிர்கொண்ட தோனி, 2 ரன்கள் எடுத்து வெற்றி அல்லது ஒரு ரன் எடுத்து சமன் செய்யலாம் என்று எண்ணியிருந்தார். கடைசியில் பிராவோவின் கணிப்பே நடந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெட்ஸ் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு பிராவோ தோனியின் எண்ணத்தை கணித்ததே காரணம் என்பது பிறகு தெரியவந்தது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!