[X] Close >

ஸ்டாலின்- டிடிவி இணைந்து புதிய ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி கருத்து

TTV-Dhinakaran--Stalin-will-joins-hands--Subramanian-Swamy

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி தினகரன் அணியும் சேர்ந்து அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பார்கள் என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதை அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி புதிய தலைமுறையிடம் பேசும்போது, “கருணாநிதி அரசியலில் இருந்து வெளியேறிவிட்டார் எனத் தெரிகிறது. ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் உள்ளது. அனைத்து எம்எல்ஏ-க்களும் தேர்தல் வரக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள். ஸ்டாலின், திமுக மீது தினகரனுக்கு வெறுப்பு கிடையாது. எனவே டிடிவி தினகரன் வெளியில் இருந்து திமுக-விற்கு ஆதரவு தர வாய்ப்பு உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையும் இனி உயரும். தமிழக பாஜக தலைமையை மாற்றிவிட்டு, பாஜக தனித்து நின்றால் தமிழகத்தில் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close