விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் டீசர்!

விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் டீசர்!
விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் டீசர்!

அஜீத் நடித்த விவேகம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆண்டனி எல் ரூபன். விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திலும் இவரே எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விரைவில் அப்படத்தின்  டீசர் வெளியாகும் என அறிவித்து இருந்தனர். ஆனால், இன்னும் வெளியாகவில்லை. தற்போது, விவேகம் படம் உலகம் முழுவதுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரூபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர். 


இதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. நடிகர்களையும் வெறுக்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவேகம் படம் ரிலீசாகி இருக்கும் நிலையில் மெர்சல் பட டீசர்  வெளியானால் அப்படத்தை பாதிக்கும் என்பதால் டீசர் வெளியிடப்படவில்லை என அவர் விளக்கி உள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com