3,500 கி.மீ தூரத்துக்கு நாடு முழுவதிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், ரயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோருக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்றும் ஐஆர்சிடிசி, இர்கான் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் 2020 ஆம் ஆண்டுக்குள் அகல ரயில் பாதை தடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் அருண்ஜேட்லி கூறினார்.
3,500 கி.மீ தூரத்துக்கு நாடு முழுவதிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 7,000 ரயில்களில் சூரிய ஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் எனவும் அருண் ஜெட்லி கூறினார்.
ஆன்மிக பயணங்களை மேற்கொள்வோருக்காக பிரத்யேகமாக ரயில்கள் இயக்கப்படும் என்றும் பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை