முத்தலாக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 22-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கை தொடர்ந்த 5 முஸ்லிம் பெண்களில் ஒருவர், இஷ்ரத் ஜகான். இவர், மேற்கு வங்க மாநிலம் கோலாபாரி பகுதியில் வசிக்கிறார். விவாகரத்தான இவருக்கு 13 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், தீர்ப்பு வெளியானதில் இருந்து அவருக்கும், குழந்தைகளுக்கும் மாமனார் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து தினமும் கொலை மிரட்டல் வந்துகொண்டிருப்பதாக இஷ்ரத் ஜகானின் வழக்கறிஞர் நஸியா இலாஹி கான் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, இதுபற்றி கோலாபாரி போலீஸில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதியினரும் அவரை அருவருப்பான வார்த்தைகளால் திட்டுகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார். அவரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை’ என்றார்.
இதையடுத்து பாதுகாப்பு கேட்டு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இஷ்ரத் ஜகான் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் நகல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் கேசார்நாத் திரிபாதி, பீகார் முதல் நிதிஷ் குமார் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?