விஜயகாந்த்‌ பிறந்தநாள்: வைகோ, தமிழிசை நேரில் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 65-வது‌ பிறந்த நாளான இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Advertisement

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள விஜயகாந்தின் இல்லத்தில் அவருடைய பிறந்த‌நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அடுத்ததாக‌, தமிழிசை சவுந்தரராஜனும் விஜயகாந்திற்கு நேரில் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் இளைஞரணி ‌செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement