விஜயின் மெர்சல், அஜீத்தின் விவேகம் படங்கள் பற்றிதான் கோலிவுட் முழுவதும் பேச்சு. இவை இரண்டும்தான் 2017ம் ஆண்டின் மிகப்பெரிய படங்கள். இரு படங்களில் சிங்கிள் ட்ராக் பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டகள், டீசர் என மாறிமாறி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், விவேகம், மெர்சல் படங்களுக்கிடையே ஏகப்பட்ட தொடர்புகளும், ஒற்றுமைகளும் இருக்கின்றன. விவேகம், மெர்சல் ஆகிய இருபடங்களுக்கும் எடிட்டராக பணியாற்றியுள்ளார் ஆண்டனி எல்.ரூபன். இரு படங்களிலும் அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். விஜயுடன் மூன்றாவது முறையாகவும், அஜித்துடன் முதல் முறையாகவும் இணைந்து நடித்துள்ளார் காஜல் அகர்வால்.
திரைத்துறைக்கு வந்து இருவரும் 25வது ஆண்டுகளை கடக்கும் நிலையில் மெர்சலும், விவேகமும் ரிலீசாக இருக்கிறது. மெர்சலில் ஆளப்போறான் தமிழன் பாடலைப்பாடிய பூஜா விவேகம் படத்தில் காதலாட பாடலை பாடியுள்ளார். ஐரோப்பாவில் விவேகம் படத்தின் 95 சதவிகித படப்பிடிப்பு நடைபெற்றது. அதேபோல் மெர்சல் படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பும் ஐரோப்பாவில் நடைபெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவரது படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவேகம்- மெர்சல் படங்களுக்கிடையே இத்தனை தொடர்புகளா?
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை