தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி

Glorious-Gillies

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.


Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அருண்குமார், சாய் கிஷோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் ஹரி கோபிநாத் 38 பந்துகளில் 50 விளாசி ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் சதீஷ், வசந்த் சரவணன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஒரு ஓவர் மீதமிருந்த நிலையிலேயே சென்னை அணி வெற்றி கண்டது. சதீஷ், வசந்த் சரவணன் ஆகியோர் தலா 23 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


Advertisement

நடப்புத் தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் வந்த தூத்துக்குடி அணி, இறுதிப் போட்டியில் சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது அந்த அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement