ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கு: 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும் 9 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

2000 ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா தனது கோபால்கஞ்ச் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. படுகொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் வேறு ஒரு கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 19 பேரில் 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement