அப்பாவின் கனவை நிறைவேற்றிய பாண்ட்யா!

Hardik-Pandya-Gifts-Father-an-SUV

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அப்பாவின் கனவை இலங்கையில் இருந்தபடியே நிறைவேற்றியுள்ளார்.


Advertisement

இலங்கை அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடி சதம் அடித்து பாராட்டு பெற்ற பாண்ட்யா, குஜராத்தை சேர்ந்தவர். சூரத்தில் கார் பைனான்ஸ் செய்து வந்தார் இவரது அப்பா ஹிமன்சு பாண்ட்யா. மகன்கள் குணால், ஹர்திக் பாண்டியாக்களில் கிரிக்கெட் ஆசையை வளர்க்க, பிசினசை விட்டுவிட்டு வடோதரா சென்றார். அங்கு பெரும் கஷ்டத்தில் வாழ்ந்தபடி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார் இருவரையும். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இன்று இருவருமே சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாகியுள்ளனர். இதில் தம்பி ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

தனது அப்பாவின் கனவான சொகுசு காரை அவருக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் ஹர்திக். பல மாதங்களாக மனதுக்குள் கிடந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். அப்பாவுக்கு சிவப்பு நிற சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். இலங்கையில் இருந்து வீடியோ கால் மூலம் தனது அண்ணன் குணாலிடம் பேசி இதை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


Advertisement

இதுபற்றி ஹர்திக், ‘எனக்காக பல தியாகங்களை செய்தவர் என் அப்பா. இப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். அது, எல்லையில்லா ஆனந்தத்தை தருகிறது’ என்று சென்டிமென்டாக கூறியுள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement