2019 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக இருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக 2019 உலகக்கோப்பை சமயத்தில் இந்திய அணி இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


Advertisement

விராட் கோலியுடனான பிரச்னையால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். ரவி சாஸ்திரி பயிற்சியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்துள்ளது, இந்திய ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. முழுமையான உடற்தகுதி உள்ள வீரர்களால் மட்டுமே 2019 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும்” என்றார்.


Advertisement

மேலும், “உலகின் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணியாக 2019 உலகக்கோப்பை சமயத்தில் இந்திய அணி இருக்க வேண்டும். வீரர்களுக்கான முக்கிய தேர்வில் ஃபீல்டிங்கும், உடற்தகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்விலிருந்து ரசிகர்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும், எப்படிப்பட்ட வீரர்களை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement