JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் கருணாநிதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சில மணி நேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

நீர்ச்சத்து, ஊட்டசத்து குறைபாடு, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக்காக திமுக தலைவர் கரு‌ணாநிதி, கடந்த டிசம்பர் மாதம் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து 8 மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், 3-வது முறையாக இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் வெளியானதும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட கலக்கத்தை போக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, உணவு செலுத்துவதற்கான குழாயை மாற்றும் பொருட்டு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சில மணி நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் பி.ஈ.ஜி எனப்படும் சிறிய மருத்துவ சி‌கிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை முடிந்த பின் அவர் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து காலை 7.20 மணிக்கு மருத்துவக் குழுவினர் கருணாநிதியின் தொண்டையிலிருந்த பழைய குழாயை அகற்றிவிட்டு புதிய குழாயை பொருத்தினர். 8 மணிக்கு சிகிச்சை முடிந்ததும், பிற வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கருணாநிதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். இதனிடையே கருணாநிதி பூரண நலம் பெற்று விரைவில் கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

வீடியோ

Advertisement: