டி.என்.பி.எல்: சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்திய தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


Advertisement

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கில்லீஸ் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. முடிவில் 114 ரன்களில் சேப்பாக் அணி ஆட்டமிழந்தது. தொடரந்து களமிறங்கிய தூத்துக்குடி அணியின் அதிசயராஜ் 4 விக்கெட்களையும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

எளிய இலக்கை நோக்கி விளையாடிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியில், வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். முடிவில் தூத்துக்குடி அணி 13-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த வாஷிங்டன் சுந்தர், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement