கமல் கூறுவது வெறும்பேச்சுதான்: சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமல்ஹாசனுடன் இணைந்து அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க தயாராக இருப்பதா‌கவும், ஆனால் அவர் கூறுவது வெறும்பேச்சுதான் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளா‌ர்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமூக பிரச்னைகளுக்கு தன்னுடன் இணைந்து குரல் கொடுப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனுடன் இணைந்து அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு கமல்ஹாசன் தயாரா? ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.  அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான்” என்று சீமான் கூறினார்.

மேலும், “சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன். ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும். நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான். ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை” என்றும் சீமான் பேசினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement