JUST IN

Advertisement

என்னாகும் யுவராஜ் சிங் கனவு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில், அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனக்கும் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுரேஷ் ரெய்னாவுக்கும் ஏமாற்றமே.


Advertisement

கடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் அரை சதம் அடித்தார் யுவராஜ் சிங். அதற்கடுத்தப் போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரிலும் அவர் சரியாக ஆடாததால் அவரை இந்த தொடரில் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

‘2019-ல் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்பது என் கனவு’ என்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது சொல்லியிருந்தார் யுவராஜ் சிங். ஆனால் இப்போதைய நிலைமையைப் பார்த்தால் அவர் கனவு உடைந்துவிடும் என்றே சொல்கிறார்கள். 
’திறமையான வீரர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களுக்கும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதால் சீனியர் வீரர்களுக்கு இனி சிக்கல் தான்’ என்கிறார்கள். இந்த மூத்த வீரர்கள் பட்டியலில்தான் ’நம்ம தல’ தோனியும் இருக்கிறார்.


Advertisement

சமீபத்தில் தோனியின் ஒருநாள் போட்டி ’பார்ம்’ சரியாக இல்லாததால், அவருக்குப் பதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பன்ட்டைத்தான் களமிறக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருக்கும் ரிஷாப், சரியாக ஆடவில்லை என்பதால் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 

வீடியோ

Related Tags : Yuvraj SinghMS DhoniCricket
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement