JUST IN

Advertisement

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - யோகி ஆதித்யநாத் உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என யோகி ஆதித்யநாத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 


Advertisement

ஆக்சிஜன்  இல்லாமல் 70  குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையை முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் கூறுகையில், 

"பதவியேற்ற பின் 4வது முறையாக மருத்துவமனை வந்துள்ளேன். குழந்தைகள் மூளை வீக்கம் காரணமாக உயிரிழந்தனர். அதிகாரிகளிடம் நோயை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளேன். சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன். முழு விசாரணைக்கு பின்னர், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் தப்பித்து விட முடியாது. குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. டெல்லியிலிருந்து மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். சுகாதார அமைச்சர் இங்கு வந்துள்ளனர்" என அவர் கூறினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement