இலங்கையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, இலங்கையின் பிரபல நாளேடான கொலம்போ பேஜ் வெளியிட்டுள்ள செய்தியில் "இலங்கையில் உள்ள கடலோரப் பகுதியான மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்களின்றி ரகசியமாக தங்கியுள்ளதாக கடலோரக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு போலீஸ் படையினருடன் அப்பகுதியை சோதனையிட்டபோது அங்குள்ள ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் பிடிபட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து சம்மந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட மூவரும் நாற்பது வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?