யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தது, உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசின் மோசமான நிர்வாகத்தையே காட்டுவதாகவும் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளையழற்சி நோய்க்காக சிகிச்சை பெற
அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூன்று நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement