அதிமுக மூன்று அணியாக பிரிந்து போனதற்கு பாஜகவே காரணம் என அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாக பிரிந்த அணிகளை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்த நிலையில் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. அதே சமயம் டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் இணைவதற்கான மறைமுக காய் நகர்த்தல்களையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொண்டு வருவதாக பேசப்படுகிறது. டெல்லியில் இரு அணியினரும் முகாமிட்ட நிலையில், இந்த மோதல்களுக்கும், அதிமுக மூன்றாக பிரிந்ததற்கும் பாஜகவே காரணம் என நமது எம்ஜிஆர் நாளேடு நையாண்டி கவிதை வெளியிட்டுள்ளது. மோடியா? இந்த லேடியா? என சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்தது பாரதிய ஜனதா தான் என்ற ரீதியில், காவி அடி, கழகத்தை அழி என்ற தலைப்பில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'