[X] Close >

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: சண்டை போட்டு வென்ற கடை உரிமையாளர்

Robbery-attempt-in-America

அமெரிக்காவின் மொபைல் விற்பனையகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களிடம் கடை உரிமையாளரும், அவரது மகனும் சண்டையிட்ட காட்சியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.


Advertisement

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மொபைல் விற்பனையகத்திற்கு வந்த இருவர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி கொள்ளை அடிக்க முயன்றனர். அவர்களை கடையின் உரிமையாளரும், அவரது மகனும் தாக்கினர். அடி பொறுக்க முடியாமல் துப்பாக்கியுடன் வந்த இருவரும் தப்பி ஓடினர். கொள்ளை அடிக்க முயன்றவர்கள் உண்மையான துப்பாக்கி வைத்திருக்கவில்லை என நினைத்துத்தான் அவர்களுடன் கடை உரிமையாளர் சண்டையிட்டிருக்கிறார்‌. விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கிதான் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்ட டெக்சாஸ் காவல் துறையினர் ஆயுதங்களுடன் வருபவர்களிடம் பொதுமக்கள் சண்டையிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close