தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: 12 மீனவர்கள் கைது

Sri-Lankan-Navy-Arrests-12-Tamil-Fishermen

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர், இன்று கைது செய்துள்ளனர். 


Advertisement

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை நாசம் செய்வது உள்ளிட்ட அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை எல்லைத்தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். 

நேற்று முன் தினம் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்ந்துள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது போன்று விடுவித்து விட்டு, மீண்டும் கைது செய்வதாக இலங்கை கடற்படை மீது மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement