அஜித், சிவா, அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பாடல்கள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
ஏற்கனவே, தனித்தனியாக மூன்று பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று தீம் சாங் உட்பட ஏழு பாடல்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து, விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஒலியமைப்பில் பல்வேறு புதுமைகளோடு இந்தப் பாடல்கள் உருவாகியுள்ளன. விவேகம் பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா உற்சாகம் அடைந்துள்ளனர்.
விவேகம் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ‘சர்வைவா’ பாடலை அனிருத்துடன் யோகி.பி, மாலி மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர். ‘தலை.. விடுதலை’ பாடலை அனிருத்துடன் ஹாரிஷ் ஸ்வாமிநாதன் பாடியுள்ளார். காதலாட பாடலை ஷாசா திருப்பதி, ப்ரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர். 1.24 நிமிடம் கொண்ட ஏகே தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது.
வெறியேற பாடலை பூர்வி கெளடிஷ், எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர். நெவர் கிவ் அப் பாடலை ராஜகுமாரியுடன் அனிருத் பாடியுள்ளார்.
அஜித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!