[X] Close >

கைகொடுத்தது பார்ட்னர்ஷிப்: ரஹானே ஹேப்பி!

Rahane-reveals-thinking-behind-India-s-quick-feet

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து நேற்று டிக்ளேர் செய்தது. கொழும்புவில் நடைபெற்று வரும் போட்டியில், 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களுடன் இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது. புஜாரா, 133 ரன்களும், துணைக் கேப்டன் ரஹானே, 132 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 


Advertisement

சதமடித்தது பற்றி ரஹானே கூறும்போது, ’இந்தப் போட்டியில் பிரதீப் பந்துவீசவில்லை. சுழல்பந்து வீச்சாளர்கள்தான் அதிகம் வீசுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் புட்வொர்க்கும் பார்ட்னர்ஷிப்பும் முக்கியம் என்பதை நானும் புஜாராவும் உணர்ந்தோம். அதன்படியே நிதானமாக, அதே நேரம் சுழல் பந்துகளை சிறப்பாக கையாண்டு விளையாடினோம். பார்ட்னர்ஷிப்பும் கைகொடுத்தது. கடந்த 9-10 டெஸ்ட் போட்டிகளில் நான் சதம் அடிக்கவில்லை. இதில் அடிப்பேன் என்று நம்பிக்கையாக இருந்தேன். பாசிட்டிவாகவே நினைத்தேன். அது நடந்தது’ என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close