தண்ணீர் தேவையை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ளும் முயற்சியில் ஒரு கிராம இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீர்வரத்து கால்வாய்களை புனரமைத்து அவர்கள் செய்திருக்கும் இந்த செயல் பெரிதும் பாராட்டப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கல்லல் என்ற கிராமம். சுற்றிலும் கண்மாய்கள் நிறைந்த இந்தப் பகுதியில் கடும் வறட்சியால் விவசாயம் முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறது. கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், மழை பெய்தும் நீரைத் தேக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக கல்லலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வாட்ஸ்அப் மூலம் ஒன்றிணைந்து, தங்களது கிராமத்திற்கான நீர் ஆதாரத்தை தாங்களே சீரமைத்துள்ளனர்.
கல்லல் இளைஞர்களின் இந்த அயராத உழைப்பை அந்த ஊர் மக்கள் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். அவர்களது சீரிய முயற்சி பலனைத் தர வேண்டுமெனில், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்து கை கொடுக்க வேண்டும் என்பது கல்லல் கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Loading More post
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
வேளாண் சட்டம்: விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை?
"சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக!"- நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி
சட்டப்பேரவைத் தேர்தல்: 35 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’