கோவையை அச்சுறுத்தும் டெங்கு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Dengue-threatens-cow-dung--Surveillance-tasks-intensify

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆய்வக உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் 183 பேரும், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 32 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 ஆய்வக உதவியாளர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மூலமாக அறிவுறுத்துதல், கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறுகின்றனர் மாநகராட்சி நிர்வாகத்தினர். இதுவரை மாவட்டத்தில் 14 பகுதிகள் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என இந்த குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு வருவதாகவும், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மா‌வட்ட நிர்வாகம் கூறியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement