திருடனை விரட்டிப் பிடித்த போக்குவரத்து ஓட்டுனரிடம் கொள்ளை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் திருடனை விரட்டிப் பிடித்த போக்குவரத்து ஊழியரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி பைக் திருடப்பட்ட சம்பவம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.


Advertisement

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். புரசைவாக்கம் கொசப்பேட்டை விவி கோவில் தெருவில் வசித்து வரும் இவர், காலை பணிமுடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேப்பேரி ஈவிஆர் சம்பத் சாலையில் சென்றபோது இளம்பெண் ஒருவர், “திருடன்.. திருடன்” எனக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து திருடனைப் பிடிக்க கிருஷ்ணமூர்த்தி பைக்கில் துரத்தினார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தபோது அந்த திருடன் கத்தியை காட்டி மிரட்டி கிருஷ்ணமூர்த்தியின் பைக்கை திருடிச் சென்று விட்டான். திருடன் பைக்கை திருடிச் சென்ற காட்சிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக, வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement