உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச அட்டவணை கொண்ட சீலிடப்பட்ட அறிக்கையை, மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கு, உள்ளாட்சித் தேர்தல் தேதியை நீதிமன்றமே அறிவிக்க வேண்டுமெனக் கோரிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகியவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள 9 உத்தரவுகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், எவற்றை நிறைவேற்ற முடியாது என்பது குறித்தும், நிறைவேற்றக்கூடிய உத்தரவுகளை எவ்வளவு காலத்துக்குள் நிறைவேற்ற முடியும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு, தேர்தலை நடத்தி முடித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்பு வரை எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்தும் அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்து.
இந்நிலையில் இன்று, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, சீலிடப்பட்ட உரையில் உத்தேச அட்டவணை கொண்ட அறிக்கையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், 3 வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Loading More post
சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு - ஆணையம்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனாகால நிதி - அரசாணை வெளியீடு
பீகார்: உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக்கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட அவலம்
சில்லறை கேட்டு முதியவரை தாக்கும் நடத்துனர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
தருமபுரி: மர்மமான முறையில் உயிரிழந்த மக்னா யானை... வனத்துறையினர் விசாரணை!