[X] Close >

முட்டை ஊழல் அம்பலம்: கமலின் புதிய ட்விட்

Egg-scandal-eruption--Kamal-s-new-tweets

பெரம்பலூரில் சத்துணவு திட்டத்தில் வழங்கப்பட்ட முட்டையில் ஊழல் நடந்ததாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவுசெய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் கெட்டுப்போன முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் சோதனைகள் நடைபெற்றது.

இந்நிலையில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை தடுத்து நிறுத்திய தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் சட்டத்தை மீறாமல் ரசிகர்கள் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது” என ரசிகர்களுக்கு கமல் அறிவுரை வழங்கியுள்ளார்.


Advertisement

முன்னதாக தமிழக அரசு மீது நடிகர் கமல்ஹாசன் பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பல அமைச்சர்களும் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது முட்டை ஊழல் அம்பலம் ஆனது பரபரப்பை அதிகரித்துள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close