[X] Close

விரைவுச் செய்திகள்: முதல்வர் கல்லணை ஆய்வு | மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் | மும்பை மழை

Subscribe
Tamilnadu--India--World-news-till-3-PM

கல்லணையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள சூழலில், தஞ்சையில் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.


Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - காங். போராட்டம்: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 ரூபாயை தாண்டியது. விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

மாநிலங்களுக்கு மேலும் 38.21 லட்சம் தடுப்பூசிகள்: மாநில அரசுகள் வசம் ஒரு கோடியே 17 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 38 லட்சத்து 21 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோருக்கு தடுப்பூசி தேவையில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என மத்திய அரசுக்கு தேசிய மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.


Advertisement

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?: தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டோக்கன் விநியோகம் தொடங்கியது: ரேஷன் கடைகளில் 14 வகை நிவாரணப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டும் பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெண் வழக்கறிஞர் மீது பார் கவுன்சிலில் புகார்: ஊரடங்கின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா மீது பார் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிரட்டும் வகையில் செயல்பட்டதற்காக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய உத்தரவு: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் மரணம் என குறிப்பிடுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை கட்டணம் உயர்வு: ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்வதற்கான வங்கிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாயாக இருந்த பணம் எடுப்பதற்கான கட்டணம் 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்மனை புறக்கணித்த சிவசங்கர் பாபா: சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் மீது முன்னாள் மாணவி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியும் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

4ஆவது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பாதிப்பு: இந்தியாவில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது. 24 மணிநேரத்தில் 3ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்: மதுரை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கோவாக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்மன் அளிக்க சென்ற காவலருக்கு அடி உதை: தெலங்கானாவில் சம்மன் கொடுக்கச் சென்ற காவலரை காலணியால் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய தொழிலதிபர், உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீடிக்கும் கனமழையால் பாதிப்பு: மகாராஷ்ராவில் நீடிக்கும் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

100 கோடி தடுப்பூசிகள் - ஜி7 நாடுகள் முடிவு: உலக நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்க ஜி 7 நாடுகள் முடிவு செய்துள்ளது. 50 கோடி தடுப்பூசிகளை அமெரிக்காவும், 10 கோடி தடுப்பூசிகளை பிரிட்டனும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி துருக்கியை எதிர்கொள்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close