[X] Close

துளிர்க்கும் நம்பிக்கை: "வியாபாரமில்லை, வேலை கிடைத்தால் போதும்" - உதவிக்கரம் கோரும் குரல்

Subscribe

“நான் மெழுகுவர்த்தி வியாபாரி. தற்போது சரியாக வியாபாரமில்லை. வீட்டில், 4 பேர் இருக்கிறோம். எங்களுக்கு, மளிகைப்பொருட்கள் உதவி தேவை– உல்தார் பேகம், தஞ்சாவூர்


Advertisement

“இந்த வருடம் பிப்ரவரியில் கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஆகவே தனியாக சமாளிக்க வேண்டியுள்ளது. பொருளாதார உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்” – புஷ்பம், தென்காசி

“என் கணவர் ஆட்டோ ஓட்டுநர். இப்போது வேலையில்லை. அவரின் வருமானத்தை நம்பி, 3 பேர் இருந்தோம். எங்களுக்கு இப்போது மளிகைப்பொருட்கள் தேவை– ஜெயக்குமாரி, திருவள்ளூர்


Advertisement

image

“நான் வெல்டர். இப்போது வேலை இல்லை. எங்கள் வீட்டு வாடகை மட்டுமே 5,000 ரூபாய். இதுபோக மின்சார கட்டணமும் வருகிறது. பொருளாதார உதவியும், குறிப்பாக மளிகைப்பொருட்கள் உதவியும் தேவை– சீனிவாசன், திருவள்ளூர்

“எனக்கு கணவர் இல்லை. வீட்டுத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேலை வேண்டும். என்னை நம்பி, இரண்டு பெண்கள் உள்ளனர். அவர்களின் படிப்புச் செலவுக்கு உதவி தேவைப்படுகிறது” – மாலதி, மதுரை


Advertisement

“நான் கூலிக்கு வேலைக்கு செல்கிறேன். கால்கள் உடைந்த நிலையில் சிகிச்சைக்குக் காத்திருக்கிறேன். மளிகைப் பொருட்கள் தேவைப்படுகிறது. வீட்டில் 4 பேர் இருக்கிறோம்” – மனோகரன், திருவள்ளூர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

imageஉதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close