[X] Close

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு - கூடுதல் தளர்வுகள்? | கோவாக்சின் தடுப்பூசி | வரி ஏய்ப்பு?

Subscribe
Tamilnadu--India--World-news-till-12-PM

ஊரடங்கு நீட்டிப்பின்போது கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திவருகிறார். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Advertisement

நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க உத்தரவு: கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகை, பணம் திருட்டு - 3 காவலர்கள் கைது: வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக 3 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ஆம்புலன்ஸ் விபத்து - கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும்போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம்: நெல்லையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தம் முற்றிவருகிறது. எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

உணவு வழங்கியதில் முறைகேடு? - விசாரணை: முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.


Advertisement

தினசரி உயிரிழப்பு அதிகரிக்க பீகாரே காரணம்: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் தொற்றால் இறந்த 4 ஆயிரம் பேரின் விவரம் சரிசெய்து சேர்க்கப்பட்டதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருகை: தமிழகத்திற்கு 85ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. நிறுத்தப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

அரசு உதவிப்பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு?: மருத்துவக்கல்லூரிகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

5 லட்சம் இந்தியர்களை ஏமாற்றிய சீன நிறுவனங்கள்: இந்தியாவில் இரண்டே மாதங்களில் 5 லட்சம் பேரிடம் சீன இணையதள நிறுவனங்கள் 150 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. டெல்லியில் திபெத்திய பெண் உட்பட 11 பேரை கைதுசெய்து இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மும்பை மழை - 11 பேர் உயிரிழப்பு; 8 பேர் காயம்: மும்பையில் பெய்துவரும் தொடர்மழையால் நேற்றிரவு 10 மணியளவில் பழமையான 4 அடுக்கு குடியிருப்பு இடிந்து விழுந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்த பணக்காரர்கள்?: அமெரிக்காவின் முன்னணி பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட 25 பேரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close