[X] Close

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வு

Subscribe
NZ-Captain-Kane-Williamson-gave-rest-for-2nd-test-against-England

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக டாம் லேதம் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இன்றையப் போட்டியில் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. முக்கியமான அந்தப் போட்டிக்கு முன்பாக தேவையான ஓய்வு அளிக்கும்விதமாக வில்லியம்சனை நியூசிலாந்து இந்தப் போட்டியில் களமிறக்கவில்லை என கூறப்படுகிறது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close