[X] Close

உ.பி: 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து செல்போனில் படம்பிடித்த 3 சிறுவர்கள் கைது

Subscribe
UP--3-boys-held-for----sexual----assault-on-5-yr-old-girl

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, அந்த செயலை மொபைல் போனில் பதிவு செய்து பரப்பிய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள்  போராட்டம் நடத்திய நிலையில், மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளித்தனர்.

 "குற்றம்சாட்டப்பட்ட மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாலியல் துன்புறுத்தலை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட செல்போனை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் ” என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அயோத்தி பிரசாத் சிங் தெரிவித்தார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close